முதன்முதலாக பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன் – சந்தோஷ் பிரதாப் மகிழ்ச்சி
சந்தோஷ் பிரதாப்,புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் சிக்னல் அட் 11:30..மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில்,டி.இமான் இசையமைப்பில்,அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் முனீஷ்காந்த்,ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இதன் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா நவம்பர் 4 அன்று நடைபெற்றது.
இதில்,நடிகர் விதார்த்,‘பிளாஸ்ட்’ பட இயக்குநர் சுபாஷ்,தயாரிப்பாளர் தனஞ்செயன்,இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார்,பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் இணைத்தயாரிப்பாளர் ஷிவானி சுப்ரமணி பேசுகையில்….
இயக்குநர்கள் பேரரசு சார்,உதயகுமார் சார் இவர்களது படங்கள் பார்த்துதான் சினிமா மீது ஆர்வமே வந்தது.தனஞ்செயன் சாருடன் பேசும்பொழுது எப்பொழுதுமே ஒரு பாசிட்டிவ் வைப் இருக்கும்.டி.இமான் எங்கள் படத்திற்கு பெரும் பலம்.படக்குழுவினர் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.இயக்குநராக என் அம்மா படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்.நிச்சயம் உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில்….
படத்தின் கதை எனக்கு முழுதாகத் தெரியாது.நான் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே தெரியும்.ஆனால்,இப்பொழுது டிரெய்லர் பார்க்கும்பொழுது அற்புதமாக வந்துள்ளது.சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை இயக்குநர் தேர்வு செய்துள்ளார். தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில்….
சினிமா மீது உள்ள ஆர்வத்தால் வேறுதுறையில் இருந்து இயக்குநர் மலர்விழி சினிமாவுக்குள் வந்திருக்கிறார்.படம் பார்த்தேன். வித்தியாசமாக சுவாரசியமாக உள்ளது.சமீபகாலமாக தமிழ்சினிமாவில் நல்லபடங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.நல்லவசூலும் இருக்கிறது.அந்தவரிசையில் இந்தப்படமும் இணையவேண்டும்.தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பல கோரிககைகள் தமிழக அரசிற்கு முன்வைத்திருக்கிறோம்.அவை ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது.படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில்….
தமிழ்சினிமாவை நம் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்கமுடியாது.அதனால்தான் இங்கிருந்து முதலமைச்சர்கள் உருவாகிறார்கள்.வேறுதுறையில் இருந்து சினிமாவிற்கு வந்து உள்ள இயக்குநர் மலர்விழி மற்றும் அவரது மகளுக்கு வாழ்த்துகள்.இந்தப்படம் அட்டகாசமாக வந்திருக்கிறது.சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையுலகினர் மற்றும் இரசிகர்களின் ஆதரவு தேவை.இந்தப்படத்தில் நடித்த மற்றும் பணிபுரிந்த அனைவரும் மிகப்பெரிய இடத்திற்குச் செல்லவேண்டும்.வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில்….
பள்ளிக்கூடம் நடத்தும் ஒருவர் படம் எடுத்திருக்கிறார் என்றால் நிச்சயம் நல்லகதையைத்தான் சொல்லியிருப்பார்.இயக்குநர் மலர்விழி மீது அந்த நம்பிக்கை உள்ளது.இளையராஜாவுக்கு அடுத்து மனதை தொடும் இசை தருபவர் இமான்தான்.சந்தோஷ் பிரதாப் மற்றும் மற்ற நடிகர்கள்,தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் என்பதை டிரெய்லர் சொல்கிறது.படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
படத்தொகுப்பாளர் கலைவாணன் பேசுகையில்….
சின்னபடங்கள்தான் என்னைப் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களை வாழவைக்கும்.இவர்களை வாழ்த்தவில்லை என்றாலும் இவர்களைப் பாதுகாக்கவேண்டும்.இதை பதிவு செய்யவே இங்கு வந்தேன்.மலர்விழி மேடம் கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கிறார். படத்தை திரையரங்குகளில் பார்த்துக் கொண்டாடுங்கள் என்றார்.
பாடலாசிரியர் மோகன்ராஜா பேசுகையில்….
இந்தப்படத்தில் உள்ள ஜோஜோ பாடலை நான்தான் எழுதினேன்.மனதுக்கு நிறைவான பாடல் இது.இமானுடன் இணைந்து பல படங்கள் பணிபுரிந்துள்ளேன்.இந்த வாய்ப்புக்கு நன்றி.இயக்குநர் மலர்விழி மேடமும் நானும் சென்னையில் ஒரே ஏரியாதான்.படம் நிச்சயம் வெற்றி பெறும்.சந்தோஷ் இன்னும் நிறைய படங்களில் கதாநாயகனாக நடிக்கவேண்டும்.வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.
‘பிளாஸ்ட்’ பட இயக்குநர் சுபாஷ் பேசுகையில்….
இயக்கம்,தயாரிப்பு இரண்டையும் ஒருவரே செய்கிறார் என்ற செய்தி கேட்போது ஆச்சரியமாக இருந்தது.இந்த உழைப்புக்காகவே படம் நிச்சயம் வெற்றி பெறும்.கடினமாக உழைக்கும் சந்தோஷ் ப்ரோ இன்னும் பெரியஇடத்திற்குச் செல்லவேண்டும்.இமான் இசை அருமை. நிச்சயம் உங்கள் அனைவரது ஆதரவும் இந்தப்படத்திற்கு வேண்டும் என்றார்.
நடிகர் விதார்த் பேசுகையில்….
நடிகர் பிரதாப் மிகவும் மென்மையானவர்,எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார்.அவருக்காகவே இந்தப்படம் வெற்றி பெறவேண்டும். தனஞ்செயன் சார் இந்தப்படம் பார்த்து வந்திருக்கிறார் என்றால் படம் நிச்சயம் பிரமாதமாக வந்திருக்கிறது.என்னுடைய இசையமைப்பாளர் இமான் ஆதரவு இந்தப்படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.படம் வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.
நடிகை பவ்யா பேசுகையில்….
எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மலர்விழி மேமுக்கு நன்றி.கடினமாக உழைத்துள்ளார்.சந்தோஷ் மற்றும் படக்குழுவினருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.இமான் சாரின் இசை அற்புதம்.ஜோ ஜோ பாடல் எனக்கு பர்சனலாக கனெக்ட் ஆனது.இது வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம்.எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.
நடிகை புஜிதா பேசுகையில்….
சிக்னல் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம்.எனக்கு வாய்ப்பு கொடுத்த மலர் மேமுக்கு நன்றி.மிகவும் திறமையான,பாசிட்டிவான கோ-ஸ்டார் சந்தோஷ்.பவ்யாவுடன் காம்பினேஷன் இல்லை.ஆனால்,அவரை எனக்கு முன்பே தெரியும்.இமான் சாரின் இசை மேஜிக். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் சந்தோஷ் பேசுகையில்….
இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த மலர் மேமுக்கு நன்றி.நாங்கள் எல்லோரும் இந்தப்படத்தின் கிரீடம் என்றால் அதன் மேல் உள்ள வைரம் இசையமைப்பாளர் இமான் சார்தான்.அவருடைய பாடலுக்கு நடனமாடி இருப்பது மகிழ்ச்சி.பல வருடங்கள் கழித்து சினிமாவில் ஒரு திரைப்படத்தில் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறேன் என்றால் அது சிக்னல் படத்தில்தான்.சமூகத்தில் பெண்கள் பலதுறைகளில் முன்னேறி விட்டார்கள்.என்றுமே அவர்களுக்குத்தான் முதலிடம்.எப்போதும் பல தடைகள் இருந்தாலும் அதை எல்லாம் எதிர்க்கவும் தாண்டி வரவும் கற்றுவிட்டோம்.அதனால் மலர்விழி மேடம் பெரிய இடத்திற்குச் செல்வார்.படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவும் நிச்சயம் தேவை என்றார்.
இசையமைப்பாளர் டி.இமான் பேசுகையில்….
இந்தப்படத்தின் கதை என்பதைத்தாண்டி பெண் இயக்குநருடன் பணியாற்றவேண்டும் என்பதற்காகவே இந்தப்படத்திற்கு இசையமைத்தேன்.கல்வியாளர் இயக்குநராக சினிமாவுக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விசயம்.சந்தோஷ பிரதாப் நிச்சயம் பெரிய இடத்திற்குச் செல்வார்.ஹீரோயின்ஸ் அழகாக நடித்திருக்கிறார்கள்.படத்திற்கு சப்போர்ட் செய்ய வந்துள்ள விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி.படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
இயக்குநர் மலர்விழி நடேசன் பேசுகையில்….
இது என்னுடைய இரண்டாவது படம்.நான் இரசித்த படங்களின் இயக்குநர்களான உதயகுமார் சார்,பேரரசு சார் என இங்கு வந்திருக்கும் பலரின் படங்களுக்கு நான் இரசிகை.அவர்கள் என் படத்திற்கு சிறப்புவிருந்தினர்களாக வாழ்த்த வந்திருப்பது கனவு நனவான தருணம். தனஞ்செயன் சாருக்கு படம் பிடித்திருப்பது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தது.படத்திற்கு இசை மிகமுக்கியம் என்பது என் எண்ணம்.இந்தப்படத்திற்கு இமான் சாரின் இசை மிகப்பெரிய பலம்.இந்தப்படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதற்கு மிகப்பெரிய பங்களிப்பு இமான் சாருக்கு உள்ளது.அவருக்கு நன்றி.சந்தோஷ்,புஜிதா,பவ்யா மற்றும் என்னுடைய தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.நிச்சயம் உங்கள் அனைவரது ஆதரவும் இந்தப்படத்திற்கு தேவை
இவ்வாறு அவர் பேசினார்.











