இயக்குநர் ஷங்கர் மகள் நடிகை நளினியின் தம்பி மகன் திருமணம் – திரண்டு வாழ்த்திய திரையுலகம்

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று நடைபெற்றது
இந்தியத்திரையுலகில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் பெற்ற ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது.
மணமகன் தருண் கார்த்திகேயன் நடிகை நளினியின் சகோதரர் கார்த்திகேயன் – சப்னா தம்பதியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மணவிழாவில் கலந்து கொண்டோர் விவரங்கள்….
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – திருமதி. துர்கா ஸ்டாலின்,நடிகர் கமல்ஹாசன்,
நடிகர்ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா,கார்த்தி,
விஷால்,அர்ஜுன்,இயக்குநர் பாரதிராஜா
மணிரத்னம் – சுஹாசினி,கே.பாக்யராஜ்,பி.வாசு,
கே.எஸ்.ரவிக்குமார்,ஹரி – ப்ரிதா ஹரி,
விஷ்ணு வர்தன் – திருமதி. அனுவர்தன்,
விக்னேஷ் சிவன் – திருமதி. நயன்தாரா
இயக்குநர் ரவி குமார்,நடிகை கீர்த்தி சுரேஷ்
நாசர் – திருமதி. கமிலா நாசர்,ஜீவா,சித்தார்த்,
நடிகை அதிதி ராவ்,தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி
தயாரிப்பாளர் ஜெயந்திலால் காடா,தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்,தயாரிப்பாளர் தில் ராஜு,ஐசரி கணேஷ்,
ராஜசேகர் (2D),திருப்பதி பிரசாத்,இசையமைப்பாளர் ஹாரில் ஜெயராஜ்,ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன்,
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்,ஜி.கே.விஷ்ணு,
நடிகை பிரியா ஆனந்த்,எஸ்.வி.சேகர்,ஒய்.ஜி.மகேந்திரா,செந்தில்,
விஜய்குமார்,சமுத்திரகனி,திருமதி பிரியா அட்லி
அன்பறிவ்,நகுல்,சுனில்,உண்ணி கிருஷ்ணன்,ராம்குமார்,
சாந்தனு பாக்யராஜ்,ஶ்ரீகாந்த்,ரவிகிருஷ்ணா,அஜய் ரத்னம்
படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத்,தாமு,வையாபூரி
சேத்தன் – திருமதி தேவதர்ஷினி
உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் அட்லி, இயக்குநர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.
மணமக்கள் அமெரிக்காவில் குடியேறவிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.