சினிமா செய்திகள்

சூர்யா அறிவிக்கும் விஜய்மில்டன் படம்

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலிசோடா,பத்து எண்றதுக்குள்ள,,கடுகு, கோலிசோடா 2 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன்.

கோலிசோடா 2 படம் வெளியாகி  இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அதன்பின் அவர் இயக்கும் படம் பற்றி எவ்வித அறிவிப்பும் வரவில்லை.

இப்போது அவருடைய புதிய படம் பற்றி நடிகர் சூர்யா அறிவிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அது என்ன படம்? 

அது ஒரு கன்னடப்படம் என்கிறார்கள். கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்செய் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படத்தை விஜய்மில்டன் இயக்கவிருக்கிறாராம். 

அப்படம் குறித்த அறிவிப்பைத்தான் சூர்யா வெளீயிடவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 

Related Posts