சினிமா செய்திகள்

சனிக்கிழமையன்று டாக்டர் படம் வெளியாவது எதனால்?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிப் பல மாதங்கள் ஆகின்றன.

இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால், திரையரங்குகளிலேயே இப்படம் வெளியாகும் என டாக்டர் படக்குழு அறிவித்தது.

அதன்படி, இன்றுமாலை ஐந்து மணியளவில் டாக்டர் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அந்த அறிவிப்பில், அக்டோபர் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வழக்கமாகப் படங்கள் வெள்ளிக்கிழமையன்று வெளீயாகும், சிவகார்த்திகேயன் போன்ற பெரிய சந்தை மதிப்புள்ள நாயகர்களின் படங்கள் ஒருநாள் முன்னதாக வியாழக்கிழ்மையே வெளியாகும்.

இந்த வழக்கங்களுக்கு மாறாக இப்படம் சனிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு என்ன காரணம்?

கொரோனாவுக்குப் பிறகான இப்போதைய சூழலில் வியாழக்கிழமை படம் வெளீயிட்டால் கூட்டம் வராது என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாம். வெள்ளிக்கிழமை எட்டாம்தேதி. எட்டாம் எண் தயாரிப்பாளர் கேஜேஆருக்கு ராசி இல்லாத எண்ணாம். எனவே ஒன்பதாம் தேதி படத்தை வெளியிட முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts