சினிமா செய்திகள்

அஜீத்தா? ரஜினியா? – விவாத முடிவில் வந்த அறிவிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார்.

அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170 ஆவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக லைகா நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ரஜினியின் 170 ஆவது படத்தின் பணிகள் இனிதே ஆரம்பமாகியுள்ளன. படத்தை ‘ஜெய்பீம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு திடீரென வெளியாக என்ன காரணம்?

இன்று லைகா நிறுவனர் சுபாஸ்கரனின் 51 ஆவது பிறந்தநாள்.

இதையொட்டி ஏதாவதொரு பெரிய அறிவிப்பை வெளியிடவேண்டுமென முடிவு செய்தார்களாம.

அஜீத் படம் குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்கிற கருத்தும் வந்ததாம். அதேசமயம, அது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படம். அதில் இயக்குநர் மாற்றம மட்டும் புதியது.

அதைவிட ரஜினியின் 170 ஆவது படம் பற்றி அறிவிப்பது லைகா நிறுவனருக்குச் சரியான பிறந்தநாள் பரிசாக இருக்கும் என முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts