அரியவன் – திரைப்பட விமர்சனம்
பெண்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பாலியல் சிக்கல்கள அதன் விளைவுகள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் படங்கள் வரிசையில் சேரும் படம் அரியவன்.
அறிமுக நாயகன் இஷான் கபடி வீரராக இருப்பது அவர் செய்யும் செயல்களுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. சண்டைக்காட்சிகளை நன்றாகச் செய்வதோடு இல்லாமல் காதல் காட்சிகளிலும் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார் நாயகன் இஷான்.
தமிழே தெரியாத நாயகி பிரணாலி தமிழப்பெண் போலவே இருப்பது பலம். நடிப்பிலும் குறைவில்லை.
டேனியல்பாலாஜி வில்லன். அதை மிக அலட்சிமாகச் செய்கிறார். சில இடங்களில் மிகை நடிப்பு.
சத்யன், கல்கி, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோரில் சத்யன் அங்கங்கே சிரிக்க வைக்கிறார். மற்றவர்களும் தாழ்வில்லை.
விஷ்ணுஶ்ரீயின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் நன்று. நாயகனை நம்பி எவ்வளவு பெரிய சண்டையையும் கொடுக்கலாம் என்று சொல்லவைத்திருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை அளவாக இருப்பது இதம்.
பழையகதை என்றாலும் அதை மாறுபட்டுக் காட்ட முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவகர்.
தமிழ்த் திரையுலகுக்கு நம்பிக்கைக்குரிய ஒரு புதிய நாயகனைக் கொடுத்தது இயக்குநரின் கூடுதல் வெற்றி.
– குமார்













