சினிமா செய்திகள்

சூர்யா படத்தின் விலை 46 கோடி – வியப்புத் தகவல்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா,மமிதா பைஜு,ரா​திகா சரத்​கு​மார்,ரவீனா டாண்​டன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four Cinemas ) சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,படக்குழு படத்தில் இடம்பெறும், “தி வெட்டிங் சாங்” என்கிற பாடலை வெளியிட்டுள்ளது.வெளியான சில நிமிடங்களிலேயே இரசிகர்களின் வரவேற்பைப் பெற்று,இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக இது பேசப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி,உற்சாகம் மற்றும் குடும்பப்பாசத்தை வெளிப்படுத்தும் இந்தப்பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கியுள்ளனர். குடும்பத்தின் பிரம்மாண்டமான திருமணத்தின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே இரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தப்பாடல் உருவாகியுள்ளது.

இந்தப்பாடலின் சிறப்பம்சமாக,நடிகர் சூர்யா பாடியிருப்பது இரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைந்துள்ளது.அவரது குரலும், திரையில் வெளிப்படும் உற்சாகமான நடிப்பும் இணைந்து பாடலுக்கு கூடுதல் உயிர் கொடுத்துள்ளன.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்,மீண்டும் ஒருமுறை தனது துள்ளலான மற்றும் கொண்டாட்ட மனநிலையை பிரதிபலிக்கும் இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.பாடலாசிரியர் கென்கருணாஸ் எழுதிய வரிகள்,திருமணவிழாவின் மகிழ்ச்சியையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.

ஏற்கனவே “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள “தி வெட்டிங் சாங்” பாடலும் அதேவரிசையில் இரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது.தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப்பாடல்கள் வெளியாகியுள்ளதால்,விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடும் போட்டிக்கிடையே,இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரிமார்க் புரொடக்சன்ஸ் எனும் நிறுவனம் பெற்றுள்ளது.குறைந்தபட்ச பாதுகாப்பு எனும் எம்ஜி அடிப்படையில் இதன்விலை சுமார் 46 கோடி என்கிறார்கள்.இது தமிழ்நாடு,கர்நாடகா ஆகிய இருமாநிலங்களுக்குமான திரையரங்க வெளியீட்டு உரிமை விலை என்றும் சொல்லப்படுகிறது.தமிழ்நாடு விலை 40 கோடி என்றும் கர்நாடகா விலை 6 கோடி என்றும் சொல்கிறார்கள்.

சூர்யாவின் முந்தைய படமான கருப்பு,சுமார் எண்பத்தைந்து கோடியை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்துக் கொடுத்திருந்ததால் இப்படம் இவ்வளவு பெரிய விலைக்கு விற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

Related Posts