பிக்பாஸ் நிகழ்வு – அதிர்ச்சியடைந்த சேரன்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 95 நாட்களைக் கடந்துவிட்டது. வரும் வாரத்துடன் போட்டி முடிவடைய உள்ளது. தற்போது தர்ஷன், முகேன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி என ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், முகேன் ஏற்கனவே இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்டார்.
இதற்கிடையே, சாண்டியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். அதே சமயம், கவின் வெளியேறினாலும் இந்த வாரம் ஒருவர் எலிமினேட் ஆகப்போவது உறுதி என்றும் கமல் அறிவித்தார்.
சாண்டி மற்றும் முகேன் இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்டதால் மீதமுள்ள தர்ஷன், லொஸ்லியா, ஷெரீன் ஆகியோரில் ஒருவர் இன்று வெளியேற உள்ளனர்.
அதன்படி தர்ஷன் தான் இன்று வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் போட்டியின் முக்கிய போட்டியாளரான தர்ஷன், இறுதிப் போட்டிக்குச் சென்று அவரே வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில், அவர் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் சேரன் கூறியிருப்பதாவது…
ஆகச்சிறந்த உழைப்பைக் கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர்.
அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்.
அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











