அட்லி ஷாருக்கான் படத்தில் இணைந்த அனிருத் – தமிழ்க்கலைஞர்கள் உருவாக்கும் இந்திப்படம்
2019 அக்டோபர் 25 அன்று வெளியான படம் பிகில். அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அதற்கடுத்து இயக்குநர் அட்லி, இந்தியில் பெரிய நடிகராக இருக்கும் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறார்.
இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதில் மாற்றம் நடந்திருக்கிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறாராம். படத்தின் அறிவிப்புக்காக ஒரு குறுமுன்னோட்டத்தை (டீசர்) தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். அதற்கு அனிருத் இசையமைத்திருக்கிறாராம்.
அதைப்பார்த்த ஷாருக்கான், சிறப்பாக இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார். இதனால் அட்லி உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் உற்சாகமாக இருக்கிறதாம்.
ஒரு இந்திப்படத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ்க்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்க செய்தி என்கிறார்கள்.











