சினிமா செய்திகள்

நடிகை சித்ரா திடீர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி

தொண்ணூறுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் சித்ரா. என் தங்கச்சி படிச்சவ, ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நாயகர்களுக்குத் தங்கை வேடமேற்று நல்ல வரவேற்பைப் பெற்றவர்.

நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அவர்,2020 இல் வெளியான என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா என்கிற படத்தில் நடித்திருந்தார். இவ்வாண்டு ஒரு மலையாளப்படம் உட்பட சில படங்களில் நடிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், நேற்றிரவு 12 மணி அளவில் திடீரென அவர் மறைந்திருக்கிறார். சென்னை சாலிகிராமம் வீட்டில் மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு வய்து 56.

அவருடைய இந்ததிடீர் மறைவுச் செய்தி திரைய்லகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவின் கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் பெயர் ஸ்ருதி. இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார்.

Related Posts