சினிமா செய்திகள்

தர்பார் படப்பிடிப்புக் காட்சிகள் வெளிவரக் காரணம் இதுதான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

அந்தப் படப்பிடிப்பு காட்சிகளை கைபேசியில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் வெளிவந்தன.

படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்பினருக்கும், இயக்குநருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடுமையான பாதுகாப்புகளையும் மீறி இம்மாதிரி படங்கள் வெளிவரக் காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம்தான் என்கிறார்கள்.

மும்பையிலுள்ள ஒரு மிகப்பெரிய கல்லூரி வளாகத்தில் படப்பிடிப்பு நடக்கிறதாம். அந்தக் கல்லூரி மாணவர்கள்தாம் ஆர்வமிகுதியில் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி நடக்கிறதாம். அது முடியவில்லை என்றால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை மாற்றும் எண்ணமும் இருக்கிறதாம்.

Related Posts