சினிமா செய்திகள்

ரஜினி தொடங்கும் டிவிக்கு ரஜினி டிவி என்று பெயர் வைத்தது இதனால்தான்

நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி தொடங்கப்போவதாகச் செய்திகள் வந்தன.அவற்றை உறுதிப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் ஓய்வுக்காக டிசம்பர் 22 இரவு குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது….

பிறக்கப்போகும் 2019 புத்தாண்டு மக்கள் அனைவரும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

‘பேட்ட’ படத்தின் மீது நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.

என்னுடைய பெயரில் வேறு யாரோ தொலைக்காட்சி சேனல் தொடங்க முயற்சிப்பதாக எனக்குத் தகவல் வந்தது.

அதற்கு முன்பாக எனது பெயரில் தொலைக்காட்சி சேனலுக்கு நான் பதிவு செய்துள்ளேன்.

தேர்தல் வரும்போது போட்டியிடுவது குறித்து கூறுகிறேன்.
கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி குறித்துப் பார்க்கலாம்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

சூப்பர்ஸ்டார் டிவி, தலைவர் டிவி, ரஜினி டிவி ஆகியனவற்றில் ரஜினி தேர்ந்தெடுத்திருப்பது ரஜினி டிவி. அதற்குக் காரணம், ரஜினி என்கிற பெயரை வைத்துவிட்டால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பு செய்யலாம் என்று திட்டமிடுகிறார்களாம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு சூப்பர்ஸ்டார் இருப்பார்கள், தலைவர் என்றாலும் வேறு யாரையாவது குறிக்கலாம் எனவே ரஜினி என்கிற பெயர் எல்லா மாநிலத்திலும் வியாபாரத்துக்கு உதவும் என்று நினைத்து இந்தப் பெயரை உறுதி செய்திருக்கிறார்களாம்.

Related Posts