October 16, 2026
சினிமா செய்திகள்

தனுஷின் மாரி 2 – வசூல் நிலவரம்

பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி உட்பட பலர் நடித்திருக்கும் படம் மாரி 2.

இப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் விஜய்சேதுபதி நடித்த சீதக்காதியும், மாரி 2 வெளியான அதேநாளில் ஜெயம்ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் விஷால் வெளியிட்ட கேஜிஎஃப் ஆகிய படங்கள் வெளியாகின.

கடும்போட்டி இருந்த நிலையிலும், படம் பற்றி விமர்சனங்கள் இருந்த நிலையிலும் தனுஷின் மாரி 2 வசூலில் முதலிடம் பிடித்தது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் நல்ல வசூல் இருந்ததாம்.

இன்றும் பள்ளிகள் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸை ஒட்டி விடுமுறை ஆகியன இருப்பதால் வசூல் குறையாது என்று நம்பினர்.

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று காலை காட்சியில் கூட்டம் குறைந்துவிட்டதாம். இரட்டை இலக்க அடிப்படையில் மக்கள் வந்திருக்கின்றனராம்.

இதனால் பெரும் தொகை கொடுத்துப் படத்தை வாங்கியவர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

Related Posts