சினிமா செய்திகள் நடிகர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம், எம்,ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவை மட்டுமின்றி இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இவற்றின் படப்பிடிப்பு அடுத்தடுத்து நடக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், இன்னொரு புதுப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை லைகா நிறுவனம் அல்லது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.

ஆகமொத்தம், 2019 ஆம் ஆண்டில் ஐந்து படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.

Related Posts