சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர் ராணாவின் காதல் அறிவிப்பு – இரசிகர்கள் வாழ்த்து மழை

தெலுங்குத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் ராணா டகுபதி. தமிழில் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார். பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். அதனால் தமிழ் இரசிகர்களுக்கும் நல்ல பரிச்சயம் உள்ளவர்.

அதோடு நடிகை த்ரிஷாவும் அவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டது. அதன்பின் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது.

இப்போது அவர் மிஹிக்கா என்னும் பெண்ணைக் காதலிப்பதாகவும்,அவரும் காதலுக்கு ஓகே சொன்னதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மிஹிக்கா ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும் தனியாக ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ராணா இன்று இதை அறிவித்ததும் தெலுங்குத் திரையுலகம் பரபரப்பாகியிருக்கிறது. பிரபாஸ் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் இரசிகர்கள் உட்பட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

Related Posts