சினிமா செய்திகள்

அண்ணாத்த பட ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார்.

இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இது ஒரு குடும்பக்கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இன்று (மே 12) மாலை இப்படத்தின் வெளியீட்டு நாளை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Posts