செய்திக் குறிப்புகள்

குற்றாலம் படத்தின் குரல்பதிவு தொடங்கியது

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு மே 11 ஆம் தேதியன்று திரைப்படத்துறையில் படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் தொடங்கின.

கமலின் இந்தியன் 2, விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்கள் உட்பட 21 படங்களின் பணிகள் தொடங்கியிருக்கின்றன.அந்த வரிசையில், நேற்று முதல் படமாக நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் படத்தின் குரல்பதிவுப் பணிகள் தொடங்கின.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர், குற்றாலம் என்ற படத்தை தனது டிரென்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார்.

இதில் ஜெ.எம்.பஷீர் கதாநாயகனாகவும் மீனுகார்த்திகா, சௌந்திகா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் ராதாரவி, பவர்ஸ்டார், தாடிபாலாஜி, ஆனந்த்நபாபு, ஸ்டண்ட் மாஸ்டர் தவசிராஜ், ஏ.எம்.சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். மார்ச் மாதம் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக 22.3.2020 முதல் ஊரடங்கு அமுலில் இருக்கிறது.அதனால் இந்தப்படத்தின் வேலைகள் தடைபட்டிருந்தன. தற்போது தமிழக முதல்வர் சில பணிகள் செய்து கொள்ள 11.5.2020 முதல் தளர்வுகள் அறிவித்தார். அதில் திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட அறிவிப்பாக பின் தயாரிப்புப் பணிகளை 5 பேர் கொண்ட குழுவினருடன் சமூக இடைவெளி விட்டு பணி புரிய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

திரைத்துறை வட்டாரத்தில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதில் நேற்று முதல் படமாக ஜெ.எம்.பஷீர் நடிக்கும் குற்றாலம் படத்தின் குரல்பதிவுப் பணி அதன் இசையமைப்பாளர் ஸ்டீபன் ராயல் ஸ்டுடீயோவில் தொடங்கியது.

படத்தின் நாயகனான பஷீர் படத்தில் தனது காட்சிகளுக்கு குரல்பதிவு செய்தார். சமூக இடைவெளி பின்பற்றபட்டு நாயகன் மற்றும் 4 நபர்களுடன் பணிகள் நடந்தன.

Related Posts