சினிமா செய்திகள்

தர்பார் பாடல் விழா – தேதி இடம் குறித்த தகவல்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார்.

லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றனவாம்.

டிசம்பர் ஏழாம் தேதி அவ்விழா நடக்கவிருக்கிறதாம். நேரு உள்விளையாட்டரங்கில் மிகப் பெரிய அளவில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தவிருக்கிறார்களாம்.

இவ்விழாவில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தன் குழுவினருடன் இணைந்து பாடல்களைப் பாடி கச்சேரி நடத்தவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த்,ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினரோடு இவ்விழாவில் கலந்து கொள்ள லைகா நிறுவனர் சுபாஷ்கரனும் பறந்து வருகிறார் என்கிறார்கள்..
 

Related Posts