சினிமா செய்திகள் நடிகர்

வளரும் நாயகனை மனமுவந்து வாழ்த்திய சிம்பு

மார்ச் 15 ஆம் தேதி யுவன் இசையில் சிம்பு பாடிய நான் யாருன்னு தெரியுமா? பாடல் வெளியானது. மெட்ரோ சிரிஷ் நாயகனாக நடிக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தில் இடம் பெறும் பாடல் அது.

அப்பாடல் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப் பட்டிருக்கிறது அப்பாடலின் காணொலி.

இந்தத் தகவல்களால் மகிழ்ச்சியடைந்த சிம்பு, யுவன் ஷ்ங்கர் ராஜாவையும் நாயகன் சிரிஷையும் சந்தித்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு பாடல் போலவே படமும் வெற்றியடையும் என்று வாழ்த்தியிருக்கிறார்.

வளரும் நாயகனை மனமுவந்து பாராட்டிய சிம்புவின் பெருந்தன்மையும் சிம்பு, யுவன், சிரிஷ் ஆகிய மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

Related Posts