அருவா மற்றும் வாடிவாசலை முந்தும் படம்? – சூர்யாவின் புதிய கூட்டணி
சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம்.
சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார்.
சூர்யாவின் 40 ஆவது படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.
இப்போது இவற்றை முந்திக் கொண்டு இன்னொரு படம் உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களுக்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.
அந்த அளவு இயக்குநர் பாண்டிராஜ் வேகமாகத் தயாராகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
என்ன நடக்கப்போகிறது என்பது செப்டம்பர் மாதம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.