காமெடி நடிகர் சூரி வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யம்
நகைச்சுவை நடிகர் சூரியின் அலுவலகம் சாலிகிராமத்தில் நடிகை மீனாவின் விட்டுக்கு அருகில் உள்ளது.
சூரியின் அலுவலக முகவரி சொல்ல வேண்டுமென்றாலே, நடிகை மீனா வீட்டருகில் என்று தான் குறிப்பிடுவார்கள். சூரி அலுவலகத்தின் அடையாளமாக நடிகை மீனா வீடு தான் சொல்லப்பட்டு வந்தது.
இப்போது மீனாவின் வீட்டை விலைக்கு வாங்கிவிட்டாராம் சூரி. சுமார் 6.5 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இனி, அலுவலகத்துக்கு நடந்தே வந்துபோவார் சூரி.
முன்னொரு காலத்தில் நடிகை மீனாவின் வீடு தான், சூரி அலுகலகத்துக்கு அடையாளம். அந்த வீட்டுக்கு இப்பொழுது சொந்தக்காரர் நடிகர் சூரி.
2009ல் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் தான், சூரியை நகைச்சுவை நடிகராக அடையாளப்படுத்தியது. பத்தே வருடங்களில் உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அடுத்ததாக, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகராகவும் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











