October 14, 2026
சினிமா செய்திகள்

ரொம்ப நாள் கழிச்சி பழைய இளையராஜா – சைக்கோ பாடலுக்குப் பெரும் வரவேற்பு

மிshகின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் சைக்கோ.

இப்படத்தில் நாயகியாக அதிதிராவ் ஹைதாரி நடித்துள்ளார். மேலும்,நித்யாமேனன், ராம்,சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள, உன்ன நெனச்சி நெனச்சி உருகிப் போனேன் மெழுகா.. என்கிற பாடல் வெளியாகியுள்ளது.

ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ, உள்ளம் திறந்து பேசாத ஊமை இவனோ போன்ற அழகான வரிகள் இந்தப்பாடலில் அமைந்துள்ளன.

இந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார்.சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இந்தப்பாடல் வெளியானதிலிருந்து இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் பாடலில் அப்படி ஒரு வலி குடுத்துருக்காரு மனுசன்.ரொம்ப நாளைக்குப் பிறகு இளையராஜா பாட்டு கேட்ட சந்தோசம்.

அழகான வரிகள் அருமையான மெட்டு, பாட்டு கேட்கக் கேட்க இனிமை எனப் பலரும் பாராட்டிவருகிறார்கள்.

அந்தப்பாடல் கேட்க…

Related Posts