September 21, 2026
சினிமா செய்திகள்

விஜயசேதுபதி படத்துக்கு ரஜினி படப்பெயர்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கிஷோர்,நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் புதியபடம் உருவாகி வருகிறது.

ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார்.

இப்படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் இப்படத்துக்கு விடுதலை என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன் ஆகியோர் நடிப்பில் சுந்தர்.கே.விஜயன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம் விடுதலை. நடிகர் கே.பாலாஜி தயாரித்திருந்தார்.

அந்தப்படம் போலவே இப்படத்திலும் மூன்று முக்கிய நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தின் கதைக்கு இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால் முறைப்படி அந்தத் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி இப்பெயருக்கான உரிமையைப் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts