சினிமா

கமல் மகள் அக்‌ஷராஹாசனின் அடிராசிட்டி!

விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடிப்பில் வருவாகிவரும் படம் ‘அக்னிச்சிறகுகள்’. இந்தப் படத்தை மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கிவருகிறார்.

அம்மா கிரியேஷன் சிவா தயாரித்துவரும் இந்தப் படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. ரஷ்யாவில் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதிகள் படப்பிடிப்பு நடந்தது.

அக்னிச்சிறகுகள்

அக்னிச்சிறகுகள் படத்தில் நாயகியாக, கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகிறார். ரஷ்யா படப்பிடிப்புக்கு படக்குழுவுடன் அக்‌ஷரா சென்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. படப்பிடிப்புக்கு மகிழ்ச்சியாக சென்ற அக்‌ஷரா, ரஷ்யா சென்றதும் அப்படியே மாறிவிட்டாராம். படக்குழுவினரை டார்ச்சர் செய்துவிட்டாராம்.

அப்படி நடிக்க மாட்டேன்.. இப்படி நடிக்க மாட்டேன் என்று படப்பிடிப்பில் ஒரே அட்டகாசம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, படப்பிடிப்பிலிருந்து பாதியிலேயே ஊர் திரும்பிவிட்டதாகவும் ஒரு தகவல்.

‘அக்னிச்சிறகுகள்’.

அக்னிச்சிறகுகள் குழு

தனுஷ், அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான ஷமிதாப் படத்தின் மூலம் அறிமுகமானவர் அக்‌ஷரா. தமிழில் அஜித்துடன் விவேகம், விக்ரமுடன் கடாரம் கொண்டான் என விரல் விட்டு எண்ணும் படங்களே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts