மாஃபியா பட டீசர் – ரஜினி புகழ்ச்சி படக்குழு மகிழ்ச்சி
துருவங்கள் 16 படத்தின் மூலம் எல்லோராலும் கவனிக்கப்பட்ட இயக்குநர் கார்த்திக் நரேன். அதற்க்டுத்து இவர் இயக்கிய, ‘நரகாசூரன்’ படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
அதற்கடுத்து நாடகமேடை எனும் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், அதை அப்படியே வைத்துவிட்டு மாஃபியா எனும் படத்தைத் தொடங்கினார்.
அருண்விஜய், பிரியாபவானிஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் செப்டம்பர் 16 அன்று மாலை வெளியானது.
அதற்கு முன்பாகவே அந்த டீசரை நடிகர் ரஜினிகாந்துக்குக் காட்டியுள்ளார் கார்த்திக் நரேன். அதைப் பார்த்த ரஜினி, புத்திசாலித்தனமான வேலை கண்ணா, செமையா இருக்கு, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று வாழ்த்தியிருக்கிறார்.
இச்செய்தியைச் சொல்லி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.
அந்த டீசர் இணைப்பு…











