சினிமா செய்திகள்

விஜய் வெளிநாட்டுப் பயணம் – பிகில் படக்குழுவின் கடைசி நேர பரபரப்பு

விஜய் நடிக்கும் பிகில் படம் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் பாடல்கள் வெளியீடு செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய், அப்படியே விமான நிலையம் சென்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாராம்.

குடும்பத்துடன் பத்து நாட்கள் ஓய்வுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தேதிகள் கொடுத்திருக்கிறாராம்.

இதற்கிடையே இயக்குநர் அட்லியின் அலட்சியப் போக்கால் கடைசி நேரப் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பிகில் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடப்பதாகச் சொல்லப்பட்டாலும், படத்தில் விஜய் அறிமுகமாகும் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை என்று அட்லி சொன்னதும் அனைவரும் பதட்டமாகிவிட்டார்களாம்.

விஜய் வெளிநாடு செல்வதற்குள் அந்தக்காட்சியை எடுத்தாக வேண்டும் என்பதால் அவசர அவசரமாக படப்பிடிப்புக்கு இடம் பார்த்து படப்பிடிப்பு வேலைகள் நடக்கின்றனவாம்.

இதுவரை இல்லாத மாதிரி விஜய்யின் அறிமுகக் காட்சி இருக்க வேண்டும் என்று நினைத்ததாலேயே இந்தத் தாமதம் என்கிறார்கள்.

Related Posts