சினிமா செய்திகள்

மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தள்ளிப் போனது குறித்த இருவேறு கருத்துகள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று திடீரென் இப்படம் மே 17 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தைத் தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த அற்விப்பை வெளியிட்டிருக்கிறது.

ஏன் இந்தத் தள்ளிவைப்பு? என்பது குறித்து படத்தயாரிப்புத் தரப்பில் கேட்டால், படத்தின் வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எல்லா வேலைகளையும் முடித்து மே 1 ஆம் தேதி வெளியிட்டுவிடலாம் என்று நம்பியே அறிவித்தோம்.

திட்டமிட்டபடி முடியவில்லை, அதற்காக வேகமாக முடித்து படத்தின் தரத்தைக் குறைத்துவிடக்கூடாது. எனவே கொஞ்சம் தாமதமானாலும் குற்றமில்லை நல்ல தரமான பொழுதுபோக்குப் படம் என்கிற பெயரைப் பெறவேண்டும் என்பதால் இந்தத் தள்ளிவைப்பு என்கிறார்கள்.

இதுகுறித்து விநியோகஸ்தர்கள் மத்தியில் உலவும் தகவல்…

இன்று வெளியாகியிருக்கும் காஞ்சனா 3 படத்தைக் கொடுக்கும்போதே இரண்டு வாரங்கள் வரை கண்டிப்பாகப் படத்தை மாற்றக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம்.

அதோடு ஏப்ரல் 26 அன்று அவெஞ்சர்ஸ் படம் வெளியாகவிருக்கிறது. அவை பெரும்பாலான திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

இவற்றால் மிஸ்டர் லோக்கல் படத்துக்குத் தேவையான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் என்பதால் இந்த மாற்றம் என்று சொல்லப்படுகிறது.

Related Posts