சினிமா செய்திகள்

மாஸ்டர் படம் ஓடிடி முறையில் வெளியிடப்படுமா? – தயாரிப்பாளர் பதில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் 9,2020 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா சிக்கல் காரணமாக இன்னும் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், மாஸ்டர் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடவிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால் அதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான செய்தி எதுவும் வரவில்லை.

இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது…

ஓ.டி.டி முறையில் மாஸ்டர் படத்தை விற்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்தினேன். எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. அதனால் ஓ.டி.டி முறையில் படத்தை வெளியிடவில்லை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Posts