ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் ஓவியா
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் களவாணி. இயக்குநர் சற்குணத்தின் முதல்படம்.
விமல், ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்த படம்.
எட்டாண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சற்குணம் இயக்குகிறார்.
அதே விமல் ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்பார்வையை ஜூன் 30 அன்று மாலை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகர் மாதவன்.
அது வெளியான சில நிமிடங்களிலிருந்து களவாணி முதல்பார்வை #Kalavani2FirstLook என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை டிரெண்டாக இருக்கிறது. அதுவும் முதலிடத்தில் இருக்கிறது.அதற்குக் காரணம் ஓவியா. அவருடைய ரசிகர்கள் சமூகவலிதளங்கலில் பலமாக இருக்கிறார்கள்.
இதற்கிடையே நாடோடிகள்2, சீமராஜா, சூர்யா பிறந்தநாள், அன்றே சொன்ன ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களின் செய்திகள் அவர்களுடைய படம் பற்றிய செய்திகள் வந்து போயின.
எவ்வளவு வந்தாலும் இரண்டுநாட்களைக் கடந்தும் களவாணி முதலிடத்திலேயே தொடருமளவுக்கு ஓவியாவின் செல்வாக்கு இருக்கிறது என அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.











