சினிமா செய்திகள்

நள்ளிரவில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட தளபதி 63 பட தகவல்

சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

தளபதி 63 என்று தற்போதைக்கு அழைக்கப்படும் இந்தப் படத்தை 2019 தீபாவளி நாளில் திரைக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.

அதனால் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஜூன் 4 ஆம் தேதி நள்ளிரவில் அப்படம் பற்றிய ஒரு தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

அதில்,அவருடைய இசை பதிவகத்தில் இயக்குநர் அட்லீ அமர்ந்திருக்கும் புகைப்படத்தோடு, தளபதி 63 படத்தின் இரண்டு பாடல்கள் தயாராகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.

இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Posts