செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனியை மேடையில் ஆட வைத்த நாயகி

அண்ட்ரூவ்ஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜூன் ஆஷிமாநர்வல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கொலைகாரன்.‬ பாப்டா நிறுவனம் மூலம் தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

‪தமிழில் கொலைகாரன் என்றும் தெலுங்கில் கில்லர் என்கிற பெயரிலும் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறிப் பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார்.

முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார் விஜய் ஆண்டனி.

நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றாற் போல் நடனமாடினர்.

கில்லர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஷிமாவுடன் நடிகர் விஜய் ஆண்டனி ஆடிய வீடியோ தெலுங்கு மீடியாவில் மிகவும் பிரபலமாகி ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‬

Related Posts