சினிமா செய்திகள்

சூரி கதாநாயகனாக நடிக்கும் புதியபடம்

நகைச்சுவை நடிகர் சூரி, இப்போது கதைநாயகனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் அவர் கதைநாயகனாக அறிமுகமாகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையடையவில்லை. விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவைடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கடுத்து அமீர் இயக்கவிருக்கும் ஒரு படத்தில் சூரி நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.ஆனால், அது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

இந்நிலையில், சூரி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.

மதயானைக்கூட்டம், இராவணகோட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ள விக்ரம்சுகுமாரன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம்.

அப்படத்துக்கான திரைக்கதை எழுதும் வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன.

அந்தப்படத்தை, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில் இணைதயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கும் அருண்விஷ்வா அவருடைய சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவிருக்கிறார்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகாது,நேரடியாக ஹாட்ஸ்டார் இணையதளத்தில் ஒளிபரப்பாகும் வகையில் தயாரிக்கப்படும் என்கிறார்கள்.

இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்று வேலைகள் வேகமாகியிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

Related Posts