சினிமா செய்திகள்

தமிழன்னா இளக்காரமா? – ஃபேமிலிமேன் குறித்து அடங்காதே இயக்குநர் கொந்தளிப்பு

ஜூன் 3 ஆம் தேதி இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட தி ஃபேமிலிமேன் 2 என்கிற இணையத் தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் போராளிகள் பற்றியும் இழிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

வீரஞ்செறிந்த விடுதலைப்போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் வாழும் காலத்திலேயே இப்படி அபாண்டமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து அத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் இப்படி எடுத்ததற்காகப் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டுமெனவும் கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஜீ.வி.பிரகாஷ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் அடங்காதே படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி, இத்தொடருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்..

தலைவர் மது அருந்துவது போலவும் ..
ஓடி ஒளிந்து கொள்வது போலவும்…,
பெண் போராளிகள் ஒவ்வொரு முறையும் தங்கள் உடம்பை வைத்து காரியத்தை சாதித்துக்கொள்வது போலவும்…,
பாகிஸ்தான் ISI உளவு தீவிரவாத அமைப்புகளிடம் உதவி பெற்று உறவு வைத்துக்கொண்டு இந்தியாவை எதிர்ப்பது போலவும்…..,

அடேய் முண்டங்களே மூளையற்ற மூடர் கூட்டமே எத்தனை அபத்தமான அறிவற்ற அருவருக்கத்தக்க ஆபாசமான பதிவுகளை பொய்யாக புனைந்து ஒரு தொடரை எடுத்திருக்கிறீர்கள்….

திருட்டு நாய்களே குஜராத் கலவரமும் , பாபர் மசூதி இடிப்பும் , பொற்கோவில் கைப்பற்றுதலும் இதை விட சுவாரஸ்யமான உண்மை சம்பவங்கள் அதைப்பற்றி எடுக்க முடியுமா..?? வெளியிட முடியுமா…??

தமிழன்னா …..தா உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா போச்சாடா..???

இவ்வாறு அவர் கொந்தளித்துள்ளார்.

Related Posts