பறந்து வந்த சுபாஷ்கரன் உறுதியானது பொன்னியின் செல்வன்
அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து படம் எடுக்கவிருக்கிறார் மணிரத்னம்.
அப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ்,சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி நட்சத்திரங்களையும் வைத்து ‘எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இந்தப்படத்தின். பட்ஜெட், இதுவரை மணிரத்னம் இயக்கிய படங்களிலேயே அதிக பட்ஜெட் படம்.
இந்தப்படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த செலவுத்தொகை 250 கோடி என்கிறார்கள்.
இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியிருக்கிறதாம். அதற்காக இலண்டனில் இருந்து லைகா நிறுவனர் சுபாஷ்கரன் பறந்து வந்துள்ளார். அவரும் மணிரத்னமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்களாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.











