சினிமா செய்திகள்

முதலில் காலா வரட்டும் – ரஜினி அதிரடி முடிவு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘2.ஓ படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 400 கோடி பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தை சனவரி 26,2018 அன்று வெளியிடுவதாக முதலில் அறிவித்தார்கள். அதன்பின் ஏப்ரல் வெளியீடு என்றார்கள்.

ஆனால், ‘2.ஓ  படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியவில்லை என்பது மட்டுமில்லை ஏப்ரலுக்குள்ளும் முடியாது என்கிறார்கள்.  இதனால், ஏப்ரல் வெளியீடும் சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டது.

இப்படம் தாமதமாவதால் , ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படம் முதலில் வெளியாகலாம் என்றும் சொல்லப்பட்டது.

இதுபற்றி ரஜினியிடம் கேட்டதற்கு, முதலில் எந்தப்படம் என்பது இரண்டு நாட்களில் தெரியும் என்று சொல்லியிருந்தார்.

ஆனால், 2 ஓ படத்தின் வேலைகள் முடிவடையாதது மட்டுமின்றி வேறு சில காரணங்களும் இருப்பதை அறிந்த ரஜினி, முதலில் காலா வரட்டும் என்று சொல்லிவிட்டாராம்.

இதனால் காலா படக்குழுவினர் ஏப்ரல் 27 ஆம் தேதி படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமென்றும் சொல்கிறார்கள்.

Related Posts