September 23, 2026
சினிமா செய்திகள்

ஒரு நாளில் நடக்கும் கதைதான் சவரக்கத்தி – மனம் திறந்த மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஜி.ஆர்.ஆதித்யா முதன்முறை இயக்கியிருக்கும் படம் சவரக்கத்தி.
ராம்,பூர்ணா,மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 9,2018 அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படம் குறித்து படத்தின் கதையை எழுதி வில்லன் வேடத்திலும் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கினிடம் பேசியபோது….
நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு பார்பர்ஸ் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் அவர்ளைப் பற்றி ஓரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன்.
அந்தக்கதைதான் “சவரக்கத்தி”. இது எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை.
இப்படத்தில் இயக்குநர் ராம் ,“பிச்சை” என்கிற வேடத்தில் நடித்துள்ளார். பொய்யையே கட்டிப்பிடித்துக் கொண்டு வாழ்கின்ற ஓரு பார்பர் கதாபாத்திரம்.
நான் ,“மங்கா” என்ற கேரக்டரில் கோபத்தைக் கட்டிப்பிடித்து வாழ்கின்ற ரவடி கதாபாத்திரம். நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சி அதற்குப் பின்பு நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதை இருக்கும்.
“சுமத்ரா” என்கிற வேடத்தில் பூர்ணா நடித்துள்ளார்.  ராமின் மனைவியாக காது கேட்காத, 2 கைக்குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.மிகவும் சவாலான இந்த வேடத்தைத் துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டார்.
இப்படி பொய்யையும், ரவடிதனத்தையும் கொண்டு வாழும் இருவருக்கும் பாடம் கற்பிக்கும் காது கேட்காத சுமத்ரா கதாபாத்திரம்.  அவருக்குப் பிறக்கும் குழந்தையுடன் நாங்களும் எப்படி புது மனிதர்களாக பிறக்கின்றோம் என்ற கதையை கொண்டது தான் சவரக்கத்தி.
க்ரைம் திரில்லர் போன்று விரைவான கதையம்சம் கொண்ட படம்தான் சவரக்கத்தி. முதல் முதலாக என்னுடைய தம்பி ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை முழுக்க முழுக்க  ஓரு நகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு நாளில் நடக்கிற மாதிரி இந்தக்கதை எழுதியிருக்கிறேன்.
 நாங்கள் இரண்டு இயக்குநர்கள் இப்படத்தில்  நடித்தாலும் ஆதித்யா மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார்.
இப்படத்தின் தலைப்பு சவரக்கத்தி ராம் கையிலும் கத்தி இருக்கும் என் கையிலும் கத்தி இருக்கும். “கத்தி எதுக்குத்தான் தொப்புள்கொடி வெட்டத்தான்” இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம்.
இப்படத்தில் 2 பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படம் நீண்ட காலம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தாலும் தற்பொழுது பிப்ரவரி 9 ஆம் தேதி  வெளியாகிறது. தலைப்பில் கத்தி இருந்தாலும் இப்படத்துக்கு தணிக்கையில்  யு  சான்றிதழ் கிடைத்துள்ளது.
இவ்வாறு மிஷ்கின் கூறினார்.

Related Posts