ரஜினி படம்தான் கடைசி – மூடப்படுகிறது சன்பிக்சர்ஸ்?
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் தயாராக உள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள்.
இதற்கடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதியபடத்தைத் தயாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது ரஜினியின் 169 ஆவது படம். இப்படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.
ரஜினியின் 169 ஆவது படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் 63 ஆவது படம் உட்பட பல படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
இப்போது,ரஜினி படமே கடைசியாக இருக்கட்டும் இதற்கடுத்து சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தயாரிப்பு வேலைகள் அனைத்தையும் நிறுத்தி வையுங்கள் என்று சொல்லிவிட்டாராம் சன்குழும அதிபர் கலாநிதிமாறன்.
இனிமேல் படத்தயாரிப்பே வேண்டாம்,சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை மூடிவிடலாம் என்றும் அவர் சொல்லிவிட்டாராம்.
இதனால் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் குழுவில் உள்ளவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.
மேல்மட்ட அளவில் இந்த அதிர்ச்சித் தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம், வருடத்துக்குப் பத்துப்படங்கள் தயாரிப்பது எனத் தீவிரமாகக் களமிறங்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில், இப்போது மொத்தமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை மூடும் முடிவை கலாநிதிமாறன் எடுத்திருப்பது ஏன் எனத் தெரியாமல் அனைவரும் குழம்பிப்போயுள்ளனர்.
இது தற்காலிகமானதா? நிரந்தரமானதா? என்றும் புரியாமல் தவிக்கின்றனராம்.











