தோல்விப்படத்துக்குப் பரிசா? சூர்யாவைச் சுற்றும் சூடான கேள்வி
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் 2018
தைப்பொங்கல் நாளில் வெளிவந்தது.
அப்படம் இயக்கியதற்காக இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு நடிகர் சூர்யா ஒரு மகிழுந்து கொடுத்தார்.
யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம், இந்த விலைமதிப்பற்ற அன்புக்கு நன்றி சூர்யா சார் என்று விக்னேஷ்சிவன் ட்விட் போட்டிருந்தார்.
அவருடைய இந்த ட்விட்டிற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை சேலம் பகுதியில் விநியோகம் செய்த 7ஜி சிவா,சேலம் ஏரியாவில் மட்டும் சுமார் 1.5 கோடி ரூபாய் நட்டம் என்றும்,
தமிழ்நாட்டில் படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் சுமார் 15 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்.
போட்ட பணத்தியெல்லாம் இழந்துவிட்டு நாங்கள் இருக்கிறோம், அதை மறைக்க கார் பரிசு தருகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.











