சக்ரா டிரெய்லரில் ரெஜினா இல்லை ஏன்?
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முன்னோட்டத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகச் சொல்லப்படும் ரெஜினா ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை.
இயல்பாக அவருடைய காட்சிகள் விடுபட்டுப் போகவில்லையாம். திட்டமிட்டு ரெஜினாவைக் காட்டவில்லை என்கிறார்கள்.
அதற்குக் காரணம், படத்தில் ரெஜினா முதன்மை வில்லியாக நடித்திருக்கிறாராம். அவர் நடித்துள்ள ஒரு காட்சி அல்லது ஒரு வசனத்தைக் காட்டினாலே அது அவருடைய வேடத்தை வெளிப்படுத்திவிடும் என்பதால்தான் அவர் இடம்பெறவில்லை என்று சொல்கிறார்கள்.
சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமியை வில்லியாக்கிய விஷால் இந்தப்படத்தில் ரெஜினாவை வில்லியாக்கியிருக்கிறார்.
ஆண்களைவிட பெண்களோடு மோதி வெல்வது பெரிய விசயம் என்று விஷால் நினைக்கிறார் போலும்.