என்.ஜி.கே தோல்வியை ஒப்புக்கொண்ட சூர்யா
செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா சாய்பல்லவி ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் என்.ஜி.கே.
மே 31 ஆம் வெளியான அந்தப்படத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. வசூலிலும் அப்படம் மிகவும் பின்தங்கியிருக்கிறதாம்.
அதோடு கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் படம் வெளியானதிலிருந்து அதுபற்றி எதுவும் பேசாமல் இருந்தார் நடிகர் சூர்யா.
படம் வெளியாகி எட்டு நாட்கள் ஆன நிலையில்,
#NGK திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி #NGKinTheatres #கத்துக்கறேன்தலைவரே
இவ்வாறு கருத்து சொல்லியிருக்கிறார் சூர்யா.
இதையொட்டி படத்தின் தோல்வியை அவரே ஒப்புக்கொண்டார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.












