கார்த்திக் நரேன் அதர்வா படத்தின் பெயர் இதுதான்
விஜய் நடித்த வில்லு, அஜீத் நடித்த ஏகன், ஜெயம்ரவி நடித்த பேராண்மை, மிஷ்கினின் நந்தலாலா உட்பட பல படங்களைத் தயாரித்த நிறுவனம் ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனம் சில ஆண்டுகளாகப் படத்தயாரிப்பில் ஈடுபடவில்லை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் தயாரிக்கும் புதியபடம் குறித்த அறிவிப்பு நேற்று 2022 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி வெளியானது.
அந்தப்படத்தை, துருவங்கள் பதினாறு, மாஃபியா, தனுஷ் நடிப்பில் இன்னும் வெளிவராமல் இருக்கும் மாறன் ஆகிய படங்களை இயக்கியுள்ள கார்த்திக்நரேன் இயக்குகிறார்.
இப்படத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதாநாயகிக்கான தேடல் இன்னும் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் இன்று மாலை (சனவரி2,2022) ஆறு மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று மாலை அறிவிக்கப்படவிருக்கும் இப்படத்தின் பெயர் நிறங்கள் மூன்று.
சனவரி 5 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடக்கவிருக்கிறதாம்.











