சினிமா செய்திகள் நடிகை

ரஜினிக்கு வாழ்த்து சொல்லப்போய் அஜித் ரசிகர்களிடம் சிக்கிய கஸ்தூரி

இன்று நடிகர் ரஜினி தனது 69 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதற்காக நேற்று நடிகை கஸ்தூரி ஒரு டிவிட்டர் பதிவ போட்டார். அதில் ….

ரஜினி அவர்களுக்கு எத்தனையோ பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரலாம்…. பரிசுக்கள் வரலாம்….ஆனால் அதில் எல்லாவற்றையும் விட ஆகச்சிறந்த மிக உயர்ந்த பரிசை நாளை காலை சரியாக 9 மணிக்கு ரஜினி அவர்களுக்கு தரப்போகிறோம். அது….?

இவ்வாறு கஸ்தூரி பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தல நா.செந்தில்குமார் என்பவர் ,

ரெம்பா முக்கீயம் இந்த கூத்தாடி பொறந்த நாளு

11.12.2018 பாரதியார் பிறந்த நாள் ஆகச்சிறந்த ஓரு பதிவை போட முடியல
கூத்தாடிக்கு செம்பு தூக்குறீயே கஸ்தூரிக்கா

என்று கூறியிருந்தார்.

இதனால் கடும் கோபமடைந்த கஸ்தூரி,

ட்விட்டர்ல மாலை போடுவது எப்படி என்று அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் அதிமேதாவி அண்ணன் அஜித்தின் ஒரே தம்பி ‘தல’ (வலி) செந்தில்குமார் !
குறிப்பு: மரியாதை பற்றி விரிவாக வகுப்பு எடுத்த பிறகே மாலை மேட்டருக்கு வருவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
?? பாவம் அஜித், பாவம் பாரதி!

இவ்வாறு கூறியிருந்தார் கஸ்தூரி.

அவர் அஜித்தின் பெயரைச் சொன்னதும் அவருடைய ரசிகர்கள், யாரோ போட்ட ட்வீட்டுக்காக எங்கள் அஜீத்தை எப்படிச் சொல்லலாம் என்று திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அச்சிலேற்ற முடியாத சொற்கள் ஏராளமாக இடம்பெறுகின்றன.

சமூக வலை தளங்களின் சகிக்க முடியாத சிக்கல் இதுஎன்று பொதுவானவர்கள் புலம்புகிறாரகள்.

Related Posts