சினிமா செய்திகள் நடிகர்

அஜித் 59 ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் புதிய படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 2019 பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது.

இதற்கடுத்து அஜித்தின் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இந்தப் படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ (Pink) படத்தின் மொழிமாற்று என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 14,2018) தொடங்குகிறது.

இரண்டு நாட்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை முடித்துவிட்டு 2019 சனவரியில் முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Related Posts