சினிமா செய்திகள்

இன்னும் தீராத அஜீத்தின் விஸ்வாசம் பட சிக்கல் – தயாரிப்பாளர் அறிவிப்பால் அதிர்ச்சி

தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார் நேற்று வெளியிட்டுள்ள குரல்பதிவொன்றில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரவிருக்கிற தேர்தலில் போட்டியிடவிருப்பதால் தற்போது வகித்துவரும் ஆலோசனைக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதோடு ஆலோசனைக்குழு பொறுப்பிலிருந்தபோது தீர்த்து வைத்த பல சிக்கல்களைப் பட்டியலிட்டுள்ளார்.அவர் பட்டியலிட்டுள்ள 59 சிக்கல்களில் அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தின் சிக்கலும் இருக்கிறது.

அதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது…

விஸவாசம் திரைப்படத்தை விநியோகம் செய்த வகையில் சத்யஜோதி நிறுவனத்திற்கு ரிலீஸ் சமயத்தில் திரு.கோட்டபாடி ராஜேஷ் அவர்களிடம் இருந்து வரவேண்டிய தொகையினை பேசி திரு.தியாகராஜன் அவர்களுக்கு பெற்றுத்தந்தனர். திரைப்படம் வெளியான பின்னர் வரவேண்டிய பாக்கித்தொகை குறித்து கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்டு பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது

இவ்வாறு அவர் சொல்லியிருக்கிறார்.

சனவரி 10,2019 ஆம் நாள் வெளியான அந்தப்படத்தின் வரவு செலவு கணக்கு இன்னும் நிறைவடையாமல் நிலுவையில் உள்ளது என்று 2020 மார்ச் 24 ஆம் தேதி தயாரிப்பாளர் சதீஷ்குமார் அறிவித்திருப்பது ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறதென்கிறார்கள்.

ஒரு திரைப்படத்தின் வரவு செலவுக் கணக்கு ஆண்டுக்கணக்கில் முடியாமல் இழுத்துக் கொண்டேயிருக்கும் எனும் தகவல் அதிர்ச்சிக்குரியதென்று சொல்கிறார்கள்.

Related Posts