கலாநிதிமாறனின் அதிரடி முடிவு – தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிர்ச்சி
தமிழ்த்தொலைக்காட்சிகளில் தொடங்கியதிலிருந்தே முதலிடத்தில் இருந்துவருகிறது சன் தொலைக்காட்சி.
தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் மற்றும் வங்காளத்திலும் சன் குழுமம் தொலைக்காட்சிகளை நடத்திவருகிறது.
இந்தியில் இந்நிறுவனம் வந்துவிடக்கூடாது என பல பெரிய நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வரவிடாமல் தடுத்துவருகின்றன என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சன்குழுமத் தலைவர் கலாநிதிமாறன் ஓர் அதிரடி முடிவு எடுத்துள்ளார் என்றும் அதனால் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன என்றும் சொல்லப்படுகிறது.
அப்படி என்ன முடிவு?
இப்போது தமிழ்நாட்டில் சன் தொலைக்காட்சிக்கு அடுத்த இடத்தில் இருப்பது விஜய் தொலைக்காட்சி அதன்பின் வளர்ந்து வரும் இடத்தில் இருப்பது கலர்ஸ் தொலைக்காட்சி.
இவ்விரு தொலைக்காட்சிகளின் பெருமளவு பங்குகளை வாங்க உத்தரவிட்டிருக்கிறாராம் கலாநிதிமாறன்.
நேரடியாக சன் குழுமத்தின் பெயரிலேயே அப்பங்குகள் வாங்கப்படுமா? அல்லது வேறு பெயர்களில் வாங்கப்படுமா? எனத் தெரியவில்லை.
ஆனால், மற்ற தொலைக்காட்சிகளின் பங்குகளை வாங்கும் முடிவை கலாநிதி மாறன் எடுத்துள்ளார் என்கிற அதிகாரப்பூர்வமற்ற தகவலால் தொலைக்காட்சி உலகம் அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.











