ரஜினிக்குக் கமல் சொன்ன வாழ்த்து – ரசிகர்கள் பூரிப்பு
நடிகர் ரஜினிகாந்த் தனது 69 ஆவது பிறந்தநாளை இன்று (டிசம்பர் 12) கொண்டாடுகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அவரது ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.
அவருடைய பிறந்தநாள் சிறப்பாக பேட்ட படத்தின் டீசர் இன்று வெளியிடப்படவிருக்கிறது.
அண்மையில் நடந்த பேட்ட பாடல் விழாவில் பேசிய ரஜினி, எனது பிறந்த நாள் அன்று நான் வீட்டில் இருக்கமாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்ரு காலையில் முதல் ஆளாக நடிகர் கமல் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார், அவருடைய ட்விட்டரில்,
என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்.
என்று கூறியிருக்கிறார்.
கமல் சூப்பர்ஸ்டார் என்று சொல்லியிருப்பதால் ரஜினி ரசிகர்கள் பெரிதும் மகிழ்ந்திருக்கின்றனர்.











