மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஓவியா
மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம்.
இந்தப்படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ்ஹைதாரி,பிரகாஷ்ராஜ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.
சந்தோசுசிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் பல நாட்கள் நடந்தது. இப்போது துபாய் போயிருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் ஏற்கெனவே ஏராளமான நடிகர்கள் இருக்கிறார்கள். இவை போதாதென்று பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவும் படத்தில் இருக்கிறாராம்.
அவர் நடிப்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். அண்மையில் ஆந்திராவில் நடந்த படப்பிடிப்பில் அவரும் கலந்துகொண்டார் என்று சொல்கிறார்கள்.
மணிரத்னம், ஒரு நடிகரை வைத்துப் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினாலும் அவருக்கு ஒப்பவில்லையென்றால் அதைப் பயன்படுத்தமாட்டார். ஓவியா விசயத்தில் என்ன நடக்கிறதெனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனால், அண்மைக்காலமாக சிம்புவையும் ஓவியாவையும் தொடர்புபடுத்தி செய்திகள் வருகின்றன. அதைத் தனது படத்துக்குப் பலமாக மாற்றிக்கொள்வதற்காகவே மணிரத்னம் அவரை நடிக்க வைத்திருப்பார் என்கிறார்கள்.









