ரஜினி கேட்கும் சம்பளம் – கலாநிதிமாறன் அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர்,தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ்,கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இந்தி நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அன்பறிவு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
கூலி’ படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்து ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜெயிலர் 2.நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது என்கிறார்கள்.
இந்நிலையில்,ஜெயிலர் 2 படத்துக்காக ரஜினிகாந்த் கேட்ட சம்பளம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று தகவல்கள் வருகின்றன.
படமே முடியும் நேரத்திலா சம்பளம் பேசுவார்கள்? சம்பளம் பேசி ஒப்பந்தம் போட்ட பின்புதானே படப்பிடிப்புக்கே போவார்கள்?
ஜெயிலர் 2 படத்தைப் பொறுத்தவரை சுமார் இருபத்தைந்து கோடி முன்பணம் கொடுத்துவிட்டு படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.கூலி படத்துக்கு 125 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறோம்.ஜெயிலர் 2 படத்துக்கு அதே சம்பளம் அல்லது சற்று கூடுதலாகக் கொடுப்போம் என்பது அவர்கள் கணக்கு.
ஆனால் இப்போது நடந்திருப்பதே வேறு என்கிறார்கள்.
இப்போது கூலி படத்தின் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. அது சுமார் ஐநூற்றைம்பது கோடி வரை போகும் என்று சொல்லப்படுகிறது.ஏற்கெனவே ஜெயிலர் படம் சுமார் அறுநூறு கோடிக்கு மேல் வசூல் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இவற்றை வைத்துக் கொண்டு ஜெயிலர் 2 படத்துக்கு இருநூற்றைம்பது கோடி சம்பளம் வேண்டும் என்று ரஜினி கேட்டிருக்கிறாராம்.
இதைக்கேட்டு சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் அதிர்ந்து போய்விட்டாராம்.
ஜெயிலர் படம் ஓடியதற்கும் கூலி படம் பெரிய வியாபாரம் ஆவதற்கும் ரஜினி மட்டும் காரணமில்லை அவற்றிற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.அப்படி இருக்கும்போது அதன் பலன் மொத்தத்தையும் தானே பெறவேண்டும் என ரஜினி நினைப்பது சரியா? என்பது அவரது கேள்வி என்கிறார்கள்.
இப்போது ஜனநாயகன் படத்துக்காக சுமார் இருநூறு கோடி சம்பளம் அதோடு ஜிஎஸ்டியையும் சேர்த்து சுமார் 225 கோடி சம்பளமாக விஜய் பெற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அதைவிட அதிகச் சம்பளம் வாங்கிவிட வேண்டும் என்பதுதான் ரஜினியின் கணக்கு.அதனால்தான் இருநூற்றைம்பது கோடி கேட்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இது எங்கே போய் முடியும்? என்பது போகப்போகத்தான் தெரியும் என்கிறார்கள்.