சினிமா செய்திகள்

விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடலில் இவ்வளவு பெரிய தப்பா?

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ஒரு பாடலின் காணொலி நேற்று (டிசம்பர் 10) இரவு 7 மணிக்கு வெளியானது.

அங்காளி பங்காளி எனத் தொடங்கும் அந்தப் பாடல் காணொலி வெளியான ஒரு மணிநேரத்தில் அதை 20 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். படத்தைத் தயாரித்திருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

அடிச்சிதூக்கு பாடல் காணொலிக்குக் கிடைத்த வரவேற்பைப் பற்றி சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். இமான் இசையில் பாடல் வித்தியாசமாக உள்ளது. விவேகாவின் பாடல் வரிகள் தெளிவாகவும், கேட்க இதமாகவும் இருக்கிறது என்று பாராட்டி வருகிறார்கள்.

அதேநேரத்தில் இன்னொரு பக்கம்,

டானே- டர்ராவான், தௌலத்தே – கிர்ராவான்

வந்தேன்டா மதுரைக்காரனா ..

என்கிற வரிகளைப் போட்டு

மதுரைக்காரன் என்னைக்கு சென்னைத்தமிழ் பேசினான்?
பாட்டு எழுதுறதுல ஒரு லாஜிக் வேண்டாமா? என்கிற விமர்சனங்களும் வருகின்றன.

நாயகன் மதுரைக்காரர் என்றிருந்தால் அவர் பாடும் பாடலும் மதுரைத்தமிழில் தானே இருக்கவேண்டும். சென்னைத்தமிழில் பாடுவது போல் எழுதியிருப்பது அடிப்படையிலேயே தப்பு. படக்குழுவினர் யாருக்குமே இது தெரியவில்லையா? என்கிற கேள்விகளும் வருகின்றன.

Related Posts