ராஜீவ்மேனன் இயக்கும் அடுத்த படம்
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக இருக்கும் ராஜீவ்மேனன், 23 ஆண்டுகளில் மூன்று படங்களை இயக்கியுள்ளார்.
1997 இல் பிரபுதேவா கஜோல் அரவிந்தசாமி உள்ளிட்டோர் நடித்த மின்சாரக்கனவு, 2000 ஆம் ஆண்டில், அஜீத் மம்முட்டி, ஐஸ்வர்யாராய்,தபு உள்ளிட்டோர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அதன்பின் 2019 இல் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
பதினெட்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் சர்வம்தாளமயம் படத்தைத் தொடங்கியபோதே மீண்டும் அஜீத்தை வைத்துப் படம் இயக்கப் போகிறார் என்று பேச்சு வந்தது.
ஆனால் அது நடக்கவில்லை. சர்வம் தாளமயம் படத்துக்குப் பிறகு அப்படி நடக்கும் என்றும் ஹேஸ்யங்கள் வந்தன.
ஆனால் அதுவும் நடக்கவில்லை போலும். இப்போது அவர் ஒரு குறும்படத்தை இயக்கப்போகிறாராம். இணையதளத்தில் வெளியாகும் வண்ணம் அந்தக்குறும்படம் உருவாகவிருக்கிறதாம்.
முழுநீளப் படத்தை இயக்கும் வாய்ப்பு இல்லாததாலேயே இவர் குறும்படம் இயக்குகிறார் என்று சொல்கிறார்கள்.











